இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இஞ்சிஇஞ்சி (Zingiber officinale) உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்து கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்கு பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும்.
சத்துக்கள்:
*
கால்சியம், கார்போ ஹைட்ரேட், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட், விட்டமின் ஏ.
*
***
பயன்கள்:
*
இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.
*
எல்லோருக்கும். அஜீரணக் கோளாறு, மூச்சுத் தொல்லை, மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிக நல்லது.
*
வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் ஏற்படும் போது இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் தேனில் கலந்து குறிப்பிட்ட அளவிற்கு சாப்பிட்டு வந்தால் வாந்தி, மயக்கம் இன்ஷா அல்லாஹ் போயே போய்விடும்.
*
இஞ்சி மட்டுமல்ல. அது காய்ந்து சுக்காக மாறினாலும் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாகச் செயலாற்றுகிறது. பித்தத்தை தணிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும்.
*
ஆயுளை நீடிக்கச் செய்யும். கொழுப்பைக் கரைக்கும். பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் ஏதுமின்றி இஞ்சி மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் அனைவருக்கும் பயன்படுகின்றன.
*
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும்.
*
ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே.
*
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
*
இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
*
பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
*
காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
*
இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
*
இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
*
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
***
நன்றி அறுசுவை.
நன்றி விக்கிபீடியா.
நன்றி ஈகரை.
0 comments:
கருத்துரையிடுக