...

"வாழ்க வளமுடன்"

10 மார்ச், 2010

பேக்கான் ('Pecan) - மரம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பேக்கான் ('Pecan), அறிவியற் பெயர் கார்யா இல்லினாய்னென்சிசு (Carya illinoinensis), என்பது வட அமெரிக்காவில் தென்-நடுவான பகுதிகளிலும், மெக்சிக்கோவில் கோஅவிலா (Coahuila), அதன் தெற்கே ஃகாலிசுக்கோ (Jalisco) முதல் வேராகுரூசு (Veracruz) வரை இயற்கைச் சூழலில் காணப்படும் பெரிய மரம். இம் மரம் அமெரிக்கக் கூட்டு நாடுகளில் காணலாம்.

***
பெரிய பேக்கான் மரம்.

பேக்கான் என்னும் சொல் வட அமெரிக்க முதற்குடிகளில் ஒன்றான அல்காக்கியன் மொழியில் இருந்து பெற்றது. அல்காக்கியன் மொழியில் பேக்கான் என்றால் "கொட்டையை உடைக்கக் கல் தேவைப்படும் வகை" என்று பொருள்.

***

பேக்கான் கொட்டையில் உள்ளேயுள்ள பருப்பு

பேக்கான் கொட்டையின் பருப்பை உண்ணலாம். இது பலவகையான ஊட்டசத்துகள் கொண்டவை. உண்டபின் உட்கொள்ளும் இனிப்புவகைகளில் பேக்கான் பருப்புகள் பயன்படுகின்றன.
***

பேக்கான் மரத்தில் முற்றிய பேக்கான் கொட்டை
பேக்கான் மரம் நாற்காலிகள், மேசைகள், இருக்கைகள், மரப்பலகைகளால் பதித்த தரைகள் போன்ற மரப் பொருட்கள் செய்யவும் பயன்படுகின்றது. இறைச்சியைப் புகைமூட்டி சமைக்கும் பொழுதும் மணத்திற்காக பேக்கான் மரங்கள் பயன்படுகின்றன.
***
ஆண் ஊசல்சரப் பூங்கொத்துகள் (catkins)

அமெரிக்க வேளாண்மைத் துறை வரையறை செய்யும் வலுவான நிலம் என்னும் அளவுகோலில் 5 முதல் 9 வரையான நில வகைகளில், ஆனால் கோடையில் வெப்பமுடன் ஊரப்பதம் நிறைந்த இடங்களில், பேக்கான் மரங்கள் வளரும்.
பேக்கான் மரங்கள் உண்ணக்கூடிய பருப்புடைய பழக்கொட்டைகளை 300 ஆண்டுகளுக்கு மேலாகவும் கொடுக்கவல்லவை.
***
பேக்கான்கள் புறவுறையுடனும் அவை இல்லாமலும்



பேக்கான்கள்
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து:

ஆற்றல் 690 kcal 2890 kJ
மாவுப்பொருள்கள் 14 g -
நார்ப்பொருள் 10 g
கொழுமியம் 72 g -
நிறை 6 g -
நிறைவுறா ஒற்றைக்கொழுப்பியம் 41 g -
நிறைவுறா பல்கொழுப்பியம் 22 g
புரதம் 9 g
***
இதில் உள்ள‌ ஊட்டச்சத்துகள்:
*
பேக்கான்களில் புரதப் பொருட்களும் நிறைவுபெறா கொழுப்பியங்களும் நிறைய உள்ளன. 100 கிராம் பேக்கான் பருப்பில் அதிக நிறைவுபெறா ஒற்றைகொழுப்பியம் 41 கிராமும் நிறைவுபெறா பல்கொழுப்பியம் 22 கிராமும் உள்ளன.
*
உண்ணும் கொழுப்புச் சத்துகள் நிறைவுபெறா கொழுப்பிய வகையாக இருப்பது நல்லது. பேக்கான் அதிகம் உள்ள உணவு உட்கொண்டால், பித்தக்கற்கள் உருவாகும் தீவாய்ப்புகள் பெண்களில் குறையும் என்று கண்டுள்ளனர்.
*
பேக்கான் பருப்புகளில் அதிகமான அளவு ஆக்சிசனாக்குத் தடுப்பிகள் இருப்பதாலும் தாவர இசுட்டெரால் ([phytosterol) இருப்பதாலும் "கெட்ட" கொலசுட்ரால் எனப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்பியப்புரததை (குறைந்த அடர்த்தி லிப்போபுரோட்டினை)க் குறைக்க உதவும்.
*
பிணிதீர் மருத்துவ முறை ஆய்வுகளின் படி நியூட்ரிசன் ஆய்விதழில் வெளியான ஆய்வு முடிவின் படி நாள்தோறும் கையளவு பேக்கான் பருப்புகளை உண்டுவந்தால் "கெட்ட" கொலசுட்ரால் அளவு மருந்துண்டு குறையும் அளவுக்குக் குறையக்கூடும்.
*
அமெரிக்கக் கூட்டு நாடுகளின் உணவும் மருந்தும் கட்டுப்படுத்து நிறுவனம் (FDA) கீழ்க்காணும் வாசகத்தை ஆய்வடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ளது, "அறிவியல் உண்மைசுட்டிகளின் படி, ஆனால் நிறுவப்படாத கருத்தின் படி, குறைந்த அளவு நிறைகொழுப்புகளும் குறைந்த அளவு கொலசுட்ராலும் உள்ள திட்ட சத்துணவுகளில் ஒரு பகுதியாக ஒவ்வொரு நாளும் 1.5 அவுன்சு பேக்கான் போன்ற பெரும்பாலான கொட்டைப்பருப்புகளை உண்டு வந்தால் இதயநோய் ஏற்படும் தீவாய்ப்புகள் குறையும்"

*****
நன்றி விக்கிபீடியா
***

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "