...

"வாழ்க வளமுடன்"

29 மார்ச், 2010

நெஞ்செரிச்சல் ஏற்ப்படமா இருக்க சில குறிப்புகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஹார்ட் பர்ன்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் 'நெஞ்செரிச்சல்', ஃபாஸ்ட் ஃபுட் வாழ்க்கையில் மிக எளிதாக பலரையும் வாட்டியெடுக்கும்.


பொதுவாக அஜீரணக் கோளாறு காரணமாகவே நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு, நமது உணவு முறையில் கவனம் செலுத்தினாலோ போதுமானது.
*
இந்தப் பாதிப்பு வராமலிருக்க மேற்கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் இதோ...
*
1. கார வகை உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
*
2. கொழுப்புச் சத்து மிகுதியாகக் காணப்படும் உணவுப் பண்டங்களை உட்கொள்ளக் கூடாது.
*
3. புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பின், அதனைத் தவிர்த்தல் வேண்டும்.
*
4. முறையான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதாவது, சரியான நேரத்தில் உணவருந்த வேண்டும்.
*
5. உடல் பருமனாகமால் பார்த்துக்கொள்ள வேண்டும்.
*
6. எளிதில் ஜீரணமாகாத பண்டங்களை உட்கொள்ளக் கூடாது.
*
7. துரித உணவுகளைத் தவிர்த்தல் நன்மை பயக்கும்.
*
8. எண்ணெயில் வறுத்த பலகாரங்கள், சாக்லெட் மற்றும் குளிர்பானங்களை குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
*
9. அதிக அளவில் குடிநீரைப் பருகுதல் சாலச் சிறந்தது.
*
10.நெஞ்செரிச்சல் வந்துவிட்டால், உடனடியாக வாழைப்பழத்தை உட்கொண்டால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.
***
by- எஸ்.சரவணன்.
***

இது போல் செய்து நெஞ்செரிச்சல் ஏற்ப்படமால் இருக்க பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி.


***


படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை போடவும். மிக்க நன்றி.

4 comments:

பனித்துளி சங்கர் சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு பகிந்தமைக்கு நன்றி !

பெயரில்லா சொன்னது…

Thanks for the wonderful infos prabha

prabhadamu சொன்னது…

நன்றி பனித்துளி சங்கர். உங்கள் பாராட்டுக்கும், வருகைக்கும், பதிலுக்கும், என்னை எப்போதும் ஊக்குவிப்பதுக்கும் மிக்க மிக்க நன்றி.

prabhadamu சொன்னது…

நன்றி அம்மு. உங்கள் முதல் வருகைக்கும், உங்கள் பாராட்டுக்கும், வருகைக்கும், பதிலுக்கும், என்னை எப்போதும் ஊக்குவிப்பதுக்கும் மிக்க மிக்க நன்றி. உங்கள் வருகை என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. மிக்க நன்றி அம்மு.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "