இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
டீன் ஏஜ் பெண்ணின் அம்மாவா நீங்கள்? உங்களுக்கும் உங்கள் பெண்ணுக்கும் இடையேயான உறவு எப்படி? அந்த காலத்து அம்மா போல இன்றும் இருக்கிறீர்களா? காலத்திற்கு ஏற்ப உங்களை கொஞ்சம் மாத்திக் கோங்க, தப்பில்லை. உங்களுக்கும், உங்க பெண்ணுக்கும் உள்ள உறவு மேம்பட, சில "டிப்ஸ்'. 1. மனம் விட்டு பேசுங்கள்:
*
உங்கள் பெண்ணுடன் இடைவெளி விட்டு பழகாதீர்கள். அப்படியிருந் தால், அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது. எந்த விஷயமாக இருந்தாலும், மனம் விட்டு பேசுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக, உங்கள் மகள் பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அன்றைய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கேளுங்கள்.இதனால், உங்களுக்கு பொழுது போவது மட்டுமின்றி, அவர்கள் வெளியிடங்களில் செயல்படும் விதங்களையும் அறிந்து கொள்ளலாம்.
***
2. நல்ல நண்பராக இருங்கள்:
*
நீங்கள் தாயாக மட்டும் இல்லாமல், நண்பராகவும் இருக்க முயலுங்கள். தாயிடம் கூற முடியாத சில விஷயங்களை கூட, நண்பர்களிடம் சொல்வர். நீங்களே அந்த நண்பராகவும் இருக்கும் போது, உங்கள் பெண்ணை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
***
3. உடல் தூய்மை பற்றி சொல்லுங்கள்:
*
வயது வந்த பெண் எப்படி உடலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக, மாதவிடாய் காலங்களில் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையும், அதன் அவசியத்தையும் எடுத்து கூறுங்கள்.
***
4. பெண்ணின் விருப்பமறிந்து செயல்படுங்கள்:
*
ஷாப்பிங் போறீங்களா? நீங்கள் மட்டும் கடைக்கு போய், கையில் கிடைத்ததை வாங்கி வந்து உங்க மகளிடம் கொடுக்காதீர்கள். உடை, அணிகலன், கைப்பை என, தினசரி புதுப்புது மாடல்கள் வந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் வாங்கி வருவது உங்கள் பெண்ணுக்கு பிடிக்காமல் போகலாம். இதை தவிர்க்க, உங்கள் பெண்ணையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அவளது விருப்பமறிந்து வாங்கிக் கொடுக்கலாம்.
***
5. நண்பர்களை அறிமுகப்படுத்தும் போது:
*
பள்ளி முதல் கல்லூரி வரை பெரும்பாலும், இரு பாலர் நிறுவனங்களாக தான் உள்ளன. டியூஷன் செல்லும் இடத்திலும் ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடும். எனவே, உங்கள் பெண், தன்னுடன் படித்த, அல்லது படிக்கும் ஆண் நண்பர்களை அறிமுகப்படுத்தும் போதும், அவர்களிடம் பேசும் போதும் கோபப்படாதீர்கள். மாறாக, இந்த காலகட்டத்தை நினைவில் கொண்டு, அவர்கள் ஆண் நண்பர்களுடன் பழகும் எல்லை எதுவரை இருக்கலாம் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.
***
6. நண்பர்களை தெரிந்து கொள்ளுங்கள்:
*
நண்பர்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், வாழ்க் கையே சீரழிந்து விடும் என்பதை உங்கள் பெண்ணுக்கு உணர்த் துங்கள். உங்கள் பெண்ணின் நண்பர்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். உங்கள் பெண்ணின் பிறந்த நாள், தீபாவளி, போன்ற விசேஷ தினங்களில் அவர்களை வீட்டிற்கு அழையுங்கள். இதன் மூலம், உங்கள் பெண், சரியான நபர்களுடன் தான் சேர்கிறாளா என்பதும் தெரியவரும்.
***
நன்றி ஈகரை தமிழ் களஞ்சியம்.
***
2 comments:
ம்ம்.. இது எனக்கு இல்லை. ;)
சரி, நான் கிளம்பறேன். ;)
நன்றி இமா அம்மா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா.
கருத்துரையிடுக