இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
என்னங்க பயந்துட்டிங்கலா?
***
இந்து மூன்றும் இருந்தால் குண்டூசி முதல் பீரங்கி வரை செய்யலாம்.
***
அதே போல் உலோகங்கள் நம்ம உடல் ஆரோகியத்துக்கு தொடர்பு இருக்காம்.
***
சரி இனி விஷயத்துக்கு வருவோம்!
***
இரும்பு:
*
இது நம் உடலிலுள்ள சிவப்பு ரத்த அணுக்களில் ( RedBloodCorpuscles-RBC )ஹீமோகுளோபினாக இரும்பு உள்ளது. 120 நாட்கள் வரைதான் இந்த சிவப்பணுக்கள் உயிரோடு இருக்கும். அதன் ஆயுள் முடிந்தவுடன் அதில் உள்ள இரும்பு பிரிந்து எலும்பு மஜ்ஜைகளுக்கு அனுப்பப்படும். அங்கு புதிய சிவப்பு ரத்த அணுக்களை உற்ப்பதி செய்ய அவை பயன்படுகின்றன.
*
தசைகளில் மையோகுளோபினாக அமர்ந்திருக்கும் இரும்புச் சத்து, செல்களில் ஆக்ஸிஜன் தேவையை உடனடியாக நிறைவேற்றி வைப்பதில் உதவியாக இருக்கிறது. மருந்துப் பொருள்கள் நச்சுத்தன்மை கொண்டதாக மாறாமல் தடுப்பது உட்பட இன்னும் பல முகியமான வேலைகளுக்கு இரும்புச் சத்து பின்புலமாகச் செயல்படுகிறது.
*
இரும்புச்சத்து உணவுப் பொருட்கள்:
*
கேழ்வரகு, பச்சிலைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், அத்திப்பழம், பேரிச்சம் பழம், வெல்லம், ஈரல், மீன், மாமிசம், முட்டை.
***************************************
துத்த நாகம்:
*
நாம் உணவின் உர்சியை உணர்ந்து சுவைப்பதற்க்குக் காரணாம் துத்தநாகம் தான். நம் உடலில் இது பரவலாகக் காணப்படுகிறது.நம்து உடலில் இந்தன் மொத்த அளவு 2.3 கிராம்.
***
1. தோல், எலும்புகள், முடி ஆகியவற்றின் ஆரோகியத்திற்கு இவை மிக முக்கியம்.
*
2. அஜீரணம் மற்றும் மூச்சு விடுதலில் பங்கேற்கும் என்சைம்களில் பெரும்பாலானவை இதில் உள்ளது.
*
3. செல்களின் செயல் பாடுகளுக்குப் பக்கபலமாக விளங்கும் இந்த தாது உப்பு உதவுகிறது.
*
4. நமது உடலில் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்துக்கும் தேவைப்படுகிறது.
*
5. இன்சுலின் செயல் பாட்டுக்கும் உதவி செய்கிற துத்தநாகம், நோய் எதிர்ப்புச் சக்தியைத தூண்டுவதிலும் பங்கேற்கிறது.
*
உணவுப் பொருட்கள்:
*
மாமிசம், முழு தானியங்கள் மற்றும் பயிறு வகைகள், பால், முட்டை, தயிர் போன்றவற்றிலிருந்து துத்த நாகம் கிடைக்கிறது. பெரியவர்களுக்கு 8 முதல் 15.5 மி.கி வரை ஒரு நாளுக்குத் தேவைப்படுகிறது.
********************************
செம்பு, செலீனியம்,ஃபுளோரின்:
*
இது போன்ற தாது உப்புகளும் நமது உடலுக்கு குறைந்த அளவே தேவைப்படுகிறது.
*
1. பற்கள் சொத்தை ( DentalCaries) போன்றவை ஏற்படாமல் இருக்க ஃபுளோரின் கணிசமான அளவு தேவைப்படுவதாக தெரிய வந்துள்ளது
*
2. ஈரல் செல்களின் ஆரோக்கியத்துக்கு செலீனியம் அவசியம்.
*
3. செம்பானது இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதற்குத் தேவைப்படுகிறது.
*
4. மேலும் ரத்திதில் உள்ள சிவப்பு செல்களும், நரம்புகளும் சீராக தங்கள் வேலைகளைச் செய்ய துணைபுரிகிறது.
*
5. செலீனியம் பலவிதமான கேன்சர்கள் உண்டாவதைத் தடுக்கும் சக்தியைக் கொண்டதாக ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் கூறுகின்றன.
நன்றி தி டயட் ஃபுட்.
2 comments:
மிகவும் நன்றி! இந்த கருத்துரை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் தாங்கள் செம்பு சத்து உள்ள உணவுப் பொருட்களை பற்றி எதுவும் கூறவில்லையே? அது மட்டும் கொஞ்சம் மனவருத்தம்.
//// bsnl கூறியது...
மிகவும் நன்றி! இந்த கருத்துரை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் தாங்கள் செம்பு சத்து உள்ள உணவுப் பொருட்களை பற்றி எதுவும் கூறவில்லையே? அது மட்டும் கொஞ்சம் மனவருத்தம்.
////
நன்றி bsnl.
உண்மைதான் நீங்கள் சொல்லுவது. :(
உங்கள் போன்னா நேரத்தை ஆழ்கடலுக்கு சொலவிட்டதுக்கு மிக்க நன்றி :)
கருத்துரையிடுக