...

"வாழ்க வளமுடன்"

22 பிப்ரவரி, 2010

காளான் பற்றிய அறியாத சில தகவல்கள்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
காளான்களில் கிட்டத்தட்ட 64,000 வகைகளுக்கு மேல காளான்கள் இருக்கு.

*



காளான்கிறது ஸ்போர் அப்படின்னு சொல்லப் படுற விதை போல இருக்கிற ஒண்ணிலிருந்துதான் வளர ஆரம்பிக்கும். இந்த ஸ்போர்கள் ரொம்ப ரொம்ப எடை குறைவாயும் ரொம்பச் சின்னதாயும் இருக்கும். ஸ்போரிலிருந்து நூல் மாதிரியான அமைப்புக் கிளம்பி வளரும். இதுக்கு ஹைஃபே அப்படின்னு பேரு. இந்த ஹைஃபே இழை மாதிரி இருக்கும். சில வகைகள் வெறும் கண்ணால் பார்த்தாத் தெரியாது. மைக்ராஸ்கோப்பில்தான் தெரியும்!


***




மழை வரும் போது மண் வாசனைன்னுகூட சொல்லுவாங்களே! அது என்ன தெரியுமா? மண்ணிலே இருக்கிற காளான் ஹைஃபேக்கள் மழையால் தூண்டப் பட்டுச் சில கெமில்களை உற்பத்தி பண்ணும். அதோட வாசனையைத்தான் நாம மண் வாசனை அப்படிங்கிறோம்! சில காளான்கள் ரொம்ப துர் நாற்றம் கொண்டதாயிருக்கும். இன்னும் சிலது அருமையான வாசனையோட இருக்கும்!





***




காளான் ஒரே ஒரு செல்லால் மட்டுமே ஆன தாவரம்கிறதும் ரொம்ப ஆச்சரியமான விஷயம்! ஒரே செல் தாவரம்னாலும் இதாலே நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு! பேக்கரிப் பொருள்கள் தயாரிக்கவும், பீர் தயாரிக்கவும் யீஸ்ட் ரொம்பப் பயன்படுது. அதே சமயம் தொண்டையிலும் வாயிலேயும் கொப்புளங்கள் உருவாக்கித் தொல்லை கொடுக்கிறதும் இந்த யீஸ்ட் காளான்தான்!




***





சில பேருக்குத் தொடைகளில் அரிப்பு ஏற்படுத்தும் காளான்களும் இருக்கு. சுகாதாரமில்லாத உள்ளாடைகளை அணியறது மாதிரியான காரணங்களில் அங்கே காளான் வளர்ந்து படர் தாமரை நோயை உருவாக்கும். பாதிக்கப் பட்ட மனித உடலோட ஒரு பகுதியப் பாருங்க.





***



நிறையக் காளான் வகைகள் மருந்துகள் செய்யப் பயன் படுது! உதாரணமாப் பென்சிலின் அப்படிங்கிற முக்கியமான மருந்து பெனிசிலியம் அப்படிங்கிற காளான் வகையிலிருந்துதான் கிடைக்குது. இது ஒரு உயிர் காக்கும் மருந்து.







*


உலகத்திலேயே பெரிய தாவரம் காளான் தான்.

*

இந்த வகை காளான், பட்டன் காளான் என்று அழைக்கப்படுகிறது.
இவை சமையலுக்குக்கும், உடல் நலத்துக்கும் ஏற்றது.





*


இன்னும் படிக்க விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும்.
http://lathananthpakkam.blogspot.com/2009/05/blog-post.html

*



நன்றி லதானந்த்.

2 comments:

Unknown சொன்னது…

நல்ல தகவல்கள்

prabhadamu சொன்னது…

நன்றி சங்கர். உங்கள் வருகைக்கும், உங்கள் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "