...

"வாழ்க வளமுடன்"

09 பிப்ரவரி, 2010

ஆவாரம் பூ

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்




ஆவாரம் பூ பார்க்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும்.

அதை பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்கள்.


1. உடல் சூட்டை ஆவாரம் பூ தணிக்கக் கூடியது.


2. பூவுடன் பாசிப்பயிறு சேர்த்து அரைத்து உடம்பிற்குத் தேய்த்துக் குளிக்கலாம். உடலிலுள்ள அரிப்பு நீங்க இவை நல்ல‌ மருந்து.


3. நரம்பு தளர்ச்சியை போக்க வல்லது.


4. ஆவாரம் பூவுடன் நாவல் மர இலையை சேர்த்துப் பொடியாக்கி பசும்பாலில் கலக்கிக் குடித்துவர சர்க்கரை வியாதி விலகி விடும். நாவல் இலைக்குப் பதில் வில்வ இலையையும் சேர்க்கலாம்.


5. ( வேரை குடிநீரிலிட்டுச் சாப்பிட்டுவர நீரிழிவு, ஆண்குறி எரிச்சல் தணியும். வேண்டுமானால் இத்துடன் கற்கண்டு, பசுவின் பால் சேர்த்துக் கொள்ளலாம்.


6. ஆவாரந்துளிர், கல்மதம், கொன்றைவேர் ஆகிய மூன்றையும் புளித்த மோரில் கலக்கிக் குடிக்க நீரிழிவு நோய் நீங்கும். ஆவாரம், சீந்தில், தில்லைச்செடி இவைகளின் வேர், இலை, தண்டு, பூ முதலியவற்றை முறையே மூன்று, இரண்டு, ஒன்று எனும் எடையாகக் கொண்டு, இளவறுப்பாக வறுத்து ஒன்றிரண்டாக இடித்துப் பொடியாக்கி அரைப்படிக்கு அரைப்படி நீரிட்டு, அரைக்கால் படியாகக் குடிநீர் செய்து அதில் பால் கூட்டி காலை, மாலை கொடுக்க நீரிழிவு போகும். நீரில் சர்க்கரை அளவும் குறையும். )


நன்றி தமிழ்வாணன்.

4 comments:

அண்ணாமலையான் சொன்னது…

நல்ல தகவல்கள், நன்றி

prabhadamu சொன்னது…

நன்றி அண்ணா. எனக்கு தெரிந்தது மற்றும் கொஞ்சம் தோடலில் இருந்தும் இடுகிறேன்.

saran சொன்னது…

migavum payan ulladhaga irukiradhu.nandri.....

prabhadamu சொன்னது…

/// saran கூறியது...
migavum payan ulladhaga irukiradhu.nandri.....
////


நன்றி saran ...

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "