...

"வாழ்க வளமுடன்"

08 பிப்ரவரி, 2010

எழுத்தாளர் சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு. சுஜாதா அவர்களின் ஏன்? எதற்கு? எப்படி? என்ற பதிவுகள் மிகவும் என்னை கவந்தது.

நான் படித்து அறிந்த தகவல்களை இதில் இடுகிறேன்.

இது திரு. சுஜாதா அவகளுக்கு சமர்ப்பணம்.


1. 'கடல் சூறாவளி'களிலேயே மிகப் பெரியது 'ட்ஸூனமி' என்பது ஜப்பானியச் சொல். மிகப்பெரிய அலை என்று அர்த்தம்.


2. இமயமலையின் உச்சி பகுதியில் 'கடல் வாழ் தாவரங்கள்' - உள்ளதாகப் படித்தேன் - இது பற்றி...
இருபத்திரண்டரைக் கோடி வருஷங்களுக்கு முன் ஆஸ்திரேலியா பக்கத்தில் ஒரு பெரிய தீவாக இந்தியா இருந்தது. மெல்ல அது வடமேற்காக நகர்ந்தது. ஒவ்வொரு நூற்றாண்டும் ஒன்பது மீட்டர். ஒரு காலகட்டத்தில், தற்போதைய ஆசியாவிலிருந்து 6400 கிலோமீட்டர் தெற்கில் இருந்தோம். ஆசிய ஐரோப்பிய கண்டத்துடன் நாளடைவில் முட்டி மோதி ஒட்டிக்கொண்டபோது, அந்த மோதலில் எழுந்ததுதான் இமயமலை. அதனால்தான் இமயத்தின் உச்சியில் கடல் வாழ் தாவரங்களின் ஃபாசில்கள் கிடைத்தன. இன்றைய கணக்கின்படி எவரெஸ்ட் சிகரம் வருஷத்துக்கு 3 மில்லி மீட்டர் உயர்ந்து வருகிறது. 27 மில்லி மீட்டர் வடகிழக்காக நகர்கிறது.


3. பூனை, நாய்க்கெல்லாம் நம்மைவிட இரண்டு லட்சம் மடங்கு அதிக மோப்பசக்தி; ந‌ம்மைவிட 50 மடங்கு அதிக அளவில் 'ரிசெப்டர்' செல்கள் உள்ளன். நாயின் மோப்பசக்தி ரொம்ப நுட்பமானது.


4. ஒரு மலைப்பாம்பு எலியை விழுங்க முதலில் அந்த எலியை ஒரு சுருட்டுச் சுட்டி அழுத்தும். அப்போதே எலி மயக்கம் ஆகிரது. பிறகு பாம்பு வாயை 140 டிகிரி திறந்து எலியை வயிற்றுக்கு அனுப்பும்.19 மணி நேரம் எலி ஜீரணமாகமல் இருக்கும். ( எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் கண்டு பிடித்து இருக்கிரார்கள் )

a. எலியின் தலை ஜீரணம் ஆக 2 நாள் ஆகும்.
b. 4 நாள் கழித்து அதன் ரோமங்கள் உரியும்.
c. 6 நாள் கழித்து எலும்பு மட்டும் தான் பாக்கி.
d. குடலுக்கு சென்று அதுவும் முழுவதும் ஜீரணமாக 2 வாரம் ஆகும்.

படிக்கும் போது நமக்கு சும்மா அதிருது இல்ல....


5. பூமியின் வயது என்ன தெரியுமா? சுமார் நானூறு கோடி வருஷங்கள்!( இவை ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்தில் 2ம் பாகத்தில் 29ம் பக்கம்.)


6. கொசுக்கலில் பெண் கொசுதான் மனிதனை கடிக்கும். அதற்க்கு முட்டையிடும் சக்திக்கு புரோட்டீன் கலந்த ரத்தம் தேவை. அதனால் மனிதன் வெளியிடும் மூச்சில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை வைத்தே 50 அடி தூரத்தில் கண்டு பிடிக்கும்.நம் சருமத்தில் இருந்து வரும் 'லாக்டிக்' அமிலம் அதற்க்கு பரிச்சியம். அந்தா ரத்தம் அதற்க்கு ஒரு வாரம் தாங்கும். அதுபோல் 3 மடங்கு மூக்கு ஸ்ட்ராவால் ஜிவ்வும்.
உலகில் மொத்தம் 3000ம் வகை கொசுக்கள் உள்ளன்.


7. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பாலில் CMC - யை ( Carboxy methyl cellulose )கெட்டியாக்குவதற்க்கும், நிலைப்படுத்துவதற்கும் சேர்க்கப்படும் பொருள்.


8. தங்க நகையை விட பிளாட்டினம் விலை அதிகம்.பிளாட்டினத்தை விட ரேடியம் தான் இன்னும் விலை அதிகம். ஒரு கிராம் 50,000 ரூபாய் கிட்ட விற்க்கிரது. ( இது 2004 வருடம் இடப்படது. )அப்போதே. பிளாட்டினம் மிகவும் உறுதியானது. பார்க்க சிம்புலானது.


9. தங்கத்தை விட பாம்பின் விஷம் விலை மதிப்பு அதிகறிக்க காரணம், பாம்பின் விஷத்தில் இருந்து எடுக்கப்படும் ஸீரம், பாம்பு கடிக்கு மாற்று மருந்து. அந்த விஷத்தில் இருந்து தயாரித்த ரிஸர்பின் போன்ற மருந்து ரத்த அழுத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஒரு துளி விஷம் தங்கத்தின் விலையை விட அதிகம் தான்.

நல்ல பாம்பின் விஷம் ந்யூரோபாக்ஸின் வகைப்பட்டது. கட்டு விரியானின் விஷத்தில் ஹீமோடாக்ஸின் உள்ளது. இது ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவற்றுக்கு குணமாக்க உகந்தது.


10. ஜரோப்பாவின் மாமியார் என்று டென்மார்க் நாட்டை அழைப்பதுக்கு காரணம் டென்மார்க் நாடு ஜரோப்பிய ஒன்றியத்தில் மிக முக்கியமான நாடாக அதன் பொருளாதாரத்தைக் கட்டுப்பத்தவல்ல சாம்ராஜ்யமாக உருவெடுத்துக் கொண்டிருப்பதே.
( இவை ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்தில் 2ம் பாகத்தில் 137ம் பக்கம்.)

2 comments:

அண்ணாமலையான் சொன்னது…

எனக்கு மிக பிடித்த எழுத்தாளர்....

prabhadamu சொன்னது…

நன்றி அண்ணா.

எனக்கு ஏன்? எதற்கு? எப்படி? புத்தம் படித்தேன் எனக்கு பிடித்து இருந்தது. அதான் இட்டேன். இன்னும் இருக்கு.

எனக்கு உமா பாலக்குமார், ரமணிச் சந்திரன் நாவல் பிடிக்கும்.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "