...

"வாழ்க வளமுடன்"

19 ஜனவரி, 2010

கறிவேப்பிலை ரசம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை - 200 கிராம்
பயத்தம் பருப்பு - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளிப்பழம் - 2
பூண்டு பல் - 5
சீரகம் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
மிள‌கு தூள் - 1 தேக்க‌ர‌ண்டி
வெண்ணெய் - 2 தேக்க‌ர‌ண்டி


செய்முறை:

1, பயத்தம் ப‌ருப்பை 1 ம‌ணி நேர‌ம் ஊற‌விடவும்... ஊறிய‌தும் பருப்பையும், க‌றிவேப்பிலையும் மிக்சியில் அரைக்க‌வும்.

2, வெங்க‌யாம், த‌க்காளி பொடியாக‌ ந‌றுக்கி வைத்து பூண்டையும் தட்டி வைக்கவும்.

3, கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு வெங்காயம், மிளகு சீரகம் இரண்டையும் (நான்கையும்!) போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

4, பிறகு தக்காளி போட்டு வதக்கி அரைத்த பயத்தம் பருப்பை கரைத்து ஊற்றி தண்ணீர் உப்பு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

5, இறக்கும் போது எலுமிச்சை சாற்றை கலந்து மல்லி இலை போட்டு இறக்கவும்.

நன்றி 'பலவகை நோய்களை விரட்டும் பச்சிலைச் சமையல்.'

ஆசிரியர் : கந்தர்வகோட்டை ராஜேந்திரன்

பதிப்பாசிரியர்: இராம.சீனிவாசன்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "