30 ஜூன், 2015

கம்பு அடை

எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் வகையில் இதுவும் ஒன்று.




தேவையான பொருட்கள்:


கம்பு : 1 கப்
பச்சை அரிசி : 1/2 கப்
துவரம் பருப்பு : 1/4 கப்
கட‌லை பருப்பு : 1/4 கப்
உளுத்தம் பருப்பு : 1/4 கப்
காயிந்த மிளகாய் : 8
கறிவேப்பிலை, உப்பு : தே. அளவு.


செய்முறை:


1. எல்லாப் பருப்புபையும் 1/2 மணி நேரம் ஊர விடம்.


2. கம்பு, அரிசி இரண்டையும் 2 மணி நேரம் ஊரவிடம்.


3. இவைகள் தனித் தனியாக போட்டு அரைத்து அதனுடன் ( மிளகாயும் சேர்த்து அரைக்கனும் ) உப்பு சேர்த்து கலக்கி ஊற்றவும்.


4. தேவை எனில் வெங்காயம் சேர்த்து அடை ஊற்றலாம்.


5. இல்லை எனில் கட்டியாக அரைத்து வாழை இலையில் தட்டி தோசைக் கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.



குறிப்பு:


கட்டாயம் கல் நீக்கி போடனும். கம்பில் கல் இருக்கும்.


***
புத்தகத்தில் படித்தது.
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக