06 பிப்ரவரி, 2010

கம்பு அடை


அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் வகையில் இதுவும் ஒன்று.


தேவையான பொருட்கள்:

கம்பு : 1 கப்
பச்சை அரிசி - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
கட‌லை பருப்பு - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
காயிந்த மிளகாய் - 8
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
உப்பு : தேவையான‌ அளவு.

செய்முறை:

1. எல்லாப் பருப்புகளையும் 1/2 மணி நேரம் ஊற‌ விடவும்.

2. கம்பு, அரிசி இரண்டையும் 2 மணி நேரம் ஊற‌ விடவும்.

3. இவைகளைத் தனித் தனியாக போட்டு அரைத்து அதனுடன் ( மிளகாயும், கறிவேப்பிலையும் சேர்த்து அரைக்கனும் ) உப்பு சேர்த்து கலக்கி அடை ஊற்றவும்.

4. தேவை எனில் வெங்காயம் சேர்த்து அடை ஊற்றலாம்.

5. இல்லையெனில் கட்டியாக அரைத்து வாழை இலையில் தட்டி தோசைக் கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.


குறிப்பு:

கட்டாயம் கல் நீக்கி போடனும். கம்பில் கல் இருக்கும்.

5 கருத்துகள்:

  1. கம்பு நல்ல சத்தான உணவுதான்...

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப சூப்பர் சத்தானதும்,

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜலீலா அக்கா. நீங்கலே பாராட்டினது ரொம்ப மகிழ்ச்சி அக்கா.

    பதிலளிநீக்கு
  4. தங்களின் பதிவுகள் யாவும் அருமை. மேலும் என் பதிவு தங்களின் வலைப்பூவின் வழி சென்றடிவதில் எனக்கு சம்மதம்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி இக்பால். உங்கள் வருகைக்கும், ஊக்கதுக்கும், பதிலுக்கும் மிக்க நன்றி நண்பா. தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர் பார்க்கிறோன் நண்பா.

    உங்களுடைய பதிவுகள் எடுத்து போட எனக்கு சம்மதம் தந்த உங்கள் நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு